Mar 8, 2025 - 04:06 PM -
0
பெண்மணியை போற்றுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினவிழா இன்று (08) ஹட்டன் அஜந்தா விருந்தகத்தில் இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அமைப்பின் தலைவியும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தொழிலாளர்களுக்கு தேசிய முன்னணியின் பிரதி பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சன்பிரபா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் செபஸ்டின் பிலிப், பிரதி பொதுச்செயலாளர் பழனிவேல் கல்யானகுமார், இளைஞர் அணியின் தலைவர் பா.சிவநேசன் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சங்கத்தின் பெண்கள் அமைப்பினால் தேவமணி என்ற பெண்மணி பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டதோடு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
--