Mar 9, 2025 - 09:38 AM -
0
செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (09) டுபாயில் நடைபெறவுள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையால் ஏற்பாடு செய்த பல தொடர்களில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியாளர்களாக தகுதி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 1998 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை இந்தியா இரண்டு முறை அதில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியும் ஒரு முறை செம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளது.
செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி இரண்டு முறை தகுதி பெற்றுள்ள, அதே நேரத்தில் இந்திய அணி நான்கு முறை தகுதி பெற்றுள்ளது.
2000 ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய நிலையில், அதில் நியூசிலாந்து 4 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.