செய்திகள்
பல சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு

Mar 9, 2025 - 10:28 AM -

0

பல சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல சட்டவிரோத துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். 

அதன்படி, எல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் மண்டகந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. 

இதன்போது T-56 தோட்டாக்களை பயன்படுத்துக்கூடிய ரிவால்வர் மற்றும் 03, T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நபர் கரந்தெனிய, மண்டகந்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

அத்துடன் தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொல்லாதெனிய பகுதியில் தம்பகல்ல பொலிஸ் அதிகாரிகள் குழு நடத்திய சோதனையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஊவா, கங்கோடகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

அதேநேரம் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய உலுக்குளம் பொலிஸ் அதிகாரிகள், உலுக்குளம் பொலிஸ் பிரிவின் பாவக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பவக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 32 வயதானவர்கள் என தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில், கொட்டவெஹெர பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டவெஹெர பொலிஸ் பிரிவின் கல்லேகொட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கால்லேகொட பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

அதேவேளை, கடவத்தை பொலிஸ் பிரிவின் எல்தெனிய பகுதியில், பொலிஸ் அதிரடிப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. 

இதன்போது எல்தெனிய சுவசேத பூங்காவிற்கு அருகிலுள்ள மின் சமிக்ஞை கோபுரத்திற்கு அருகில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மி.மீ துப்பாக்கி மற்றும் 9 மி.மீ தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 

அந்த இடத்தில் ஆயுதத்தை மறைத்து வைத்திருந்த நபர்களைக் தேடி கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05