Mar 9, 2025 - 05:49 PM -
0
சம்பின்ஸ் கிண்ணம் 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டுபாயில் தற்போது இடம்பெற்று வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 15 முறை நாணய சுழற்சியில் தோற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
2023இல் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப்போட்டி முதல் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது.
இதில் ரோஹித் 12 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் நாணய சுழற்சியில் தோற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணித் தலைவர்கள்:
இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா - 12 ( நவம்பர் 2023 - மார்ச் 2025)
மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் ரோஹித் சர்மா பிரையன் லாரா - 12 (ஒக். 1998 - மே 1999)
நெதர்லாந்து அணித்தலைவர் பீட்டர் போரன் - 11 (மார்ச் 2011 - ஓகஸ்ட் 2013)