விளையாட்டு
சம்பியன்ஸ் கிண்ணம் - நியூசிலாந்து அணி 251 ஓட்டங்கள்

Mar 9, 2025 - 06:01 PM -

0

சம்பியன்ஸ் கிண்ணம் - நியூசிலாந்து அணி 251 ஓட்டங்கள்

சம்பியன்ஸ் கிண்ணம் 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணி சார்பாக டேரைல் மிச்சல் 63 ஓட்டங்களையும், மைக்கல் பிரஸ்வெல் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

அதற்கமைய, போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 252 ஓட்டங்களை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05