Mar 9, 2025 - 08:40 PM -
0
கம்பஹா, அகரவிட்டவில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் நேற்று (9) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னரும், காயமடைந்தவர்களுக்கு அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
பெயர் குறிப்பிடாத நபரொருவர் அழைப்பை மேற்கொண்டு காயமடைந்தவரிடம், "நீங்கள் இன்னும் சாகவில்லையா?" என்று கேட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தை கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளரான தம்மிட சமரே என்பவர் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடையின் உரிமையாளர் சாமர சந்தருவன் (வயது 34) மற்றும் அவரது உதவியாளர் அசித தேவிந்த (வயது 30) ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் தற்போது கம்பஹா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாமர சந்தருவன் என்ற கடையின் உரிமையாளர், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பை பேணி வருபவர் என்று தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

