Mar 10, 2025 - 07:43 AM -
0
கடன் தொல்லை மட்டும் இருந்துவிட்டால் ஒட்டுமொத்த நிம்மதியே போய்விடும். தொழிலில் நஷ்டம், நிதி நெருக்கடி, கடன் பிரச்சினை போன்றவைகளில் இருந்து விடுபடுவதற்கு, எளிய பரிகாரங்கள் உதவியாக இருக்கின்றன.
நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களை செய்யும்போது, மேற்கண்ட தொல்லைகளில் இருந்து விடுபட வழிபிறக்கும். அந்தவகையில் 2 வகையான பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
உங்களது வலது கால் பாதத்தின் விரல்களுக்கு அடியில், உங்களுடைய மனப்பிரச்சனையை ஒரு சிவப்பு நிற பேனாவில், ஒரு வரியில் எழுத வேண்டும். அல்லது குறிப்பிட்ட நபரின் பெயரை எழுதி, அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் எழுதி கொள்ளலாம்.
சிவப்பு எழுத்தில் கோரிக்கை
பிறகு வலது காலை தரையில் 11 முறை தட்ட வேண்டும். ஒவ்வொரு முறை தட்டும்போதும், உங்களது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி ஏதாவது ஒரு நாள் செய்தால் போதும், விரைவில் அந்த கோரிக்கை தீரும் என்பார்கள்.
கடன் பிரச்சினை என்றில்லை, குடும்ப ஒற்றுமை தழைக்க, திருமண தடை விலக, நல்ல வேலை கிடைக்க, வருமானம் பெருக, தீராத நோய் தீர இப்படி எந்த பிரச்சனையையும் சிவப்பு மையால் எழுதலாம்.
பணப்புழக்கம் அதிகரிக்க பரிகாரம்
அதேபோல, வெற்றிலை பரிகாரமும் உதவுகிறது. வளர்பிறை வெள்ளிக்கிழமையில், இந்த பரிகாரத்தை செய்யலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நிதி நிலைமை சீராகும். பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
2 வெற்றிலையும், அதன்மீது 1 ரூபாய் நோட்டு, அந்த நோட்டுக்கு மேலே 2 கொட்டைப்பாக்கு, அதன்மீது 2 வெற்றிலை வைத்து, அப்படியே சுருட்டி நூலால் கட்டி, பீரோ அல்லது பர்ஸ், அல்லது பணப்பெட்டிகளில் வைக்கலாம். வெற்றிலையை மஞ்சள் துணியில் வைத்து, அதில் ஏலக்காய் கிராம்பு, சில ரூபாய் நோட்டு, சில சில்லறைகள் போட்டு, போட்டு வைக்கலாம். 2 நாட்கள் கழிந்ததும் வெற்றிலையை மாற்றி வைக்க வேண்டும்..
வெற்றிலை பரிகாரம்
3 நாட்கள் கழிந்ததும், இந்த பணத்தை உங்கள் தேவைக்கு செலவு செய்து கொள்ளலாம். இதைத்தவிர, கேது பகவானுக்கும், அதிதேவதையான சித்ரகுப்தன் அல்லது விநாயகருக்கும் 27 வெற்றிலையை மாலையாக கட்டி அணிவிக்கலாம்.
அதேபோல, கேதுவையும் விநாயகரையும் வழிபடவேண்டும். கேதுவுக்கு பால், நெய் அபிஷேகம் செய்து, சிவப்பு, மஞ்சள், வெள்ளை சேர்ந்த வஸ்திரம், எருக்கம்பூ மாலை அணிவிக்கலாம். நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, அன்னதானம் வழங்க வேண்டும். இப்படி 3 முறை தொடர்ந்து செய்து வந்தால் கேதுவால் ஏற்பட்ட தோஷம் விலகி அருள் கிடைக்கும்.
நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்க
இதைத்தவிர, வியாழக்கிழமைகளில் நன்கொடைகளை வழங்குவதன் மூலம், தொண்டு செய்வதன் மூலம், வியாழனின் அருள் கிடைப்பதுடன், நிதிப் போராட்டங்களை எளிதாக்க உதவும் நேர்மறையான ஆற்றல்களை ஈர்க்கும். சனிக்கிழமைகளில், சனி பகவான் சிலைக்கு முன்பு நெய் தீபம் ஏற்றி வைத்து, சனி தொடர்பான மந்திரத்தை உச்சரிக்கலாம்.
வீட்டில் தேவை இல்லாமல் தண்ணீரை செலவு செய்யக்கூடாது. இதுவும் நிதி நெருக்கடியை கொண்டுவந்துவிடும்.. தண்ணீரில் சிக்கனமாக இருந்தால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்பார்கள்!