Mar 10, 2025 - 09:05 AM -
0
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14ஆம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் வத்திக்கான் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டன.
இந்நிலையில், கடந்த மூன்று வாரமாக சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என ஜெமெல்லி வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
தனக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர்கள், செவிலியர்களுக்கு போப் பிரான்சிஸ் நன்றி தெரிவித்ததோடு, தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.