வணிகம்
சர்வதேச அங்கீகாரம் பெற்ற வணிகத் தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் IIHS வணிகக் கல்லூரி திறப்பு

Mar 10, 2025 - 09:25 AM -

0

சர்வதேச அங்கீகாரம் பெற்ற வணிகத் தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் IIHS வணிகக் கல்லூரி திறப்பு

நாட்டின் சுகாதாரத் துறையின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) நிறுவனத்துடன் இணைந்ததான வணிகக் கல்லூரி அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சிறப்பு மருத்துவ நிபுணர் கித்சிறி எதிரிசிங்கவின் தலைமையில் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தொழில் வல்லுநர்களிடையே தொழில்முயற்சி, சர்வதேச நிபுணத்துவ ஊக்குவிப்பின் மூலம் வணிக மற்றும் சுகாதாரச் சேவை கற்கைத் துறையில் சாதகமான புரட்சியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். 

அதற்கு மேலதிகமாக, மேற்படி இரு துறைகளுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு அத்தியாவசிய தலைமைத்துவப் பண்புகள், தொழில்பாடு மற்றும் மூலோபாய திறன்களை கொண்டவர்களாக பட்டதாரிகளை வலுவூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. வணிகக் கல்லூரியுடன் இணையும் மாணவர்களுக்கு வணிக நிர்வாகம் தொடர்பான உயர்மட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்களை வலுவூட்டுவதன் மூலம் துறையின் வினைத்திறன் மற்றும் புத்தாக்கத்தை விருத்தி செய்வது IIHS நிறுவனத்தின் நோக்கமாகும். 

வணிகக் கல்லூரி அங்குரார்ப்பண விழாவில் துறை சார்ந்த நிபுணர்களும் தொழில்வல்லுநர்களும் கலந்து கொண்டனர். Swisstek Aluminium நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான கலாநிதி தரிந்து அத்தபத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBA அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ரதம்பொல, IIHS நிறுவனத்தின் துணை வேந்தர் கலாநிதி ரேணுகா ஜயதிஸ்ச, IIHS நிறுவனத்தின் பீடாதிபதியும் இணை ஸ்தாபகருமான டாக்டர் நிஹால் டீ சில்வா, சந்திம சமரசிங்க மற்றும் உபாலி ரத்னாயக்க ஆகியோரும் அவர்களில் அடங்குவர். 

அவர்களின் பங்கேற்பு வணிகக் கல்வித் துறையையும் சுகாதார சேவைகள் துறையையும் ஒருங்கிணைங்க வேண்டியதன் தேவையை பெரிதும் பிரதிபலிப்பதாக உள்ளது. விழாவில் உரையாற்றிய சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கித்சிறி எதிரிசிங்க சர்வதேச போக்குகளுக்கு பொருத்தமான, நிலைபேறான விருத்தியை ஏற்படுத்தக்கூடிய வணிகத் தலைவர்களை உருவாக்குவதற்கு IIHS நிறுவனம் தம்மை அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்தார். “எதிர்கால நோக்குகளை மையப்படுத்திய பாடவிதானங்கள், சிறப்பு நிபுணர்களை கொண்ட பீடங்கள் மற்றும் வலுவான கைத்தொழில் உறவுகளுடன் இலங்கையில் வணிகக் கற்கைத் துறைக்கு புது அர்த்தம் கற்பிப்பதற்கு IIHS வணிகக் கல்லூரி தயார். இதனை சுகாதார சேவை மற்றும் வணிகத் துறை ஆகிய இரண்டு துறைகளினதும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கு அடித்தளமிடும் ஆரம்ப புள்ளியாக குறிப்பிட முடியும். இதன் மூலம் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் உலகத்தின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய புதிய தலைமுறை தொழில் வல்லுநர்களை எம்மால் உருவாக்க முடியும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05