செய்திகள்
கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு!

Mar 10, 2025 - 11:55 AM -

0

கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15வது ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார். 

இந்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05