செய்திகள்
பழுதடைந்த தேங்காய் எண்ணெய் தொகையுடன் இருவர் கைது

Mar 10, 2025 - 12:52 PM -

0

பழுதடைந்த தேங்காய் எண்ணெய் தொகையுடன் இருவர் கைது

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை ஏற்றிச் சென்ற மற்றும் உடமையில் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

விசேட அதிரடிப் படையின் அரலங்கவில முகாமின் அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை பொது சுகாதார அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவுடன் இணைந்து நேற்று (09) இரவு இந்த சோதனை நடத்தப்பட்டது. 

பொலன்னறுவை பொலிஸ் பிரிவில் கைத்தொழில் பேட்டை பகுதியில் தரமற்ற தேங்காய் எண்ணெயை லொறி ஒன்றில் கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவரும், தரமற்ற தேங்காய் எண்ணெயை உடமையில் வைத்திருந்த மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலன்னறுவை பொது சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 41 மற்றும் 51 வயதுடைய பன்னல மற்றும் சந்திவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

7,920 லிட்டர் தேங்காய் எண்ணெய் கொண்ட 36 இரும்பு பீப்பாய்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொது சுகாதார அலுவலகம் முன்னெடுத்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05