வடக்கு
முல்லைத்தீவில் பாடசாலை வாயிலை மூடி போராட்டம்

Mar 10, 2025 - 01:45 PM -

0

முல்லைத்தீவில் பாடசாலை வாயிலை மூடி போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் பாடசாலை வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பாடசாலை வாயில் கதவை மூடி காலை 7.30 தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில்  கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலை தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதும் காலை பதினொரு மணிவரை குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் யாரும் வருகை தந்து பதில் ஏதும் வழங்காத போராட்டம் தொடர்கிறது.

 

சம்பவ இடத்திற்கு வந்த மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும் அதிபர் ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை இந்நிலையில் குறித்த இடத்துக்கு அதிகாரிகள் வரும்வரை தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05