வடக்கு
கட்டுப்பணத்தை செலுத்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

Mar 10, 2025 - 04:56 PM -

0

கட்டுப்பணத்தை செலுத்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  இன்று (10)  மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளரும், ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளருமான டானியல் வசந்தன் தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

 

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை , நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

 

மன்னார் பிரதேச சபை  தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்ற மையினால்  மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

 

இந்த நிலையிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  மன்னார் மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05