உலகம்
பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய சிறுவர்கள்

Mar 10, 2025 - 07:13 PM -

0

பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய சிறுவர்கள்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வூராபிண்டா என்ற இடத்தில் சிறுவர்கள் சிலர் ஒரு இறந்த பாம்பை (கருப்புத் தலை பைத்தான் என்று அடையாளம் காணப்பட்டது) ஸ்கிப்பிங் கயிறாகப் பயன்படுத்தி விளையாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது. 

வீடியோவில், சிறுவர்கள் சிரித்து விளையாடுவதையும், ஒரு பெண்ணின் குரல் "அதைக் காட்டு, அது என்ன என்று காட்டு" என்று கேட்பதையும் கேட்க முடிகிறது. 

இந்தச் சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் அந்நாட்டு சுற்றுச்சூழல், சுற்றுலா, அறிவியல் மற்றும் புதுமைகள் துறையால் "பொருத்தமற்ற நடத்தை" என்று கண்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

கருப்புத் தலை பைத்தான் என்பது அவுஸ்திரேலியாவில் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும், இது விஷமற்றது மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்த பாம்பை காயப்படுத்துவது அல்லது கொல்வது சட்டவிரோதமானது, மேலும் இதற்கு அதிகபட்சமாக 12,615 அவுஸ்திரேலிய டொலர் (சுமார் 23.5 இலட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

சிறுவர்கள் விளையாடிய பாம்பு முன்னரே இறந்திருந்ததா அல்லது அவர்களால் கொல்லப்பட்டதா என்பது தெளிவாகவில்லை. 

இந்த வீடியோ பல ஆயிரம் பார்வைகளைப் பெற்று, உலகளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ