செய்திகள்
பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

Mar 10, 2025 - 08:38 PM -

0

பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

கொழும்பு - குருநாகல் வீதி இலக்கம் 05 இல் உள்ள நால்ல மஞ்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 12 வயது மாணவர் ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிசார் தெரிவித்தனர். 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், ட்ரக் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

பேருந்து மற்றும் ட்ரக் வாகனத்தின் சாரதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05