சினிமா
நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கும் அபிநயா

Mar 10, 2025 - 11:01 PM -

0

நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கும் அபிநயா

நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா. சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் நடிகை அபினயா விரைவில் அவரது நீண்ட நாள் காதலனை திருமண செய்துக் கொள்ளப்போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

யார் அந்த காதலன் என தெரியவில்லை? அனைவரும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர். 

இவர் பேச்சு மற்றும் செவி திறன் இல்லாதது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவர் நடிக்கும் கதாப்பாத்திரங்களில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். 

தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05