Mar 11, 2025 - 08:27 AM -
0
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (10) பிற்பகல் மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த ரயிலில் இந்த நபர் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

