Mar 11, 2025 - 09:12 AM -
0
இலங்கையின் #1 சீமெந்து உற்பத்தியாளரும், விநியோகஸ்தருமான INSEE Cement நிறுவனம், அண்மையில் சினமன்ட் லைஃப் ட்ரீம்சிட்டியில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த வணிகப் பங்காளர்கள் விருது 2025 பெருமைக்குரிய வருடாந்த நிகழ்வில் சிறப்பாகச் செயற்பட்ட வணிகப் பங்காளர்களைப் பெருமையுடன் கௌரவித்தது.
‘வரையறைகளுக்கு அப்பாலான எழுச்சி; உத்வேகம் தரும் புதிய அடிவானம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வானது நிறுவனத்தின் நிலையான வளர்ச்சி மற்றும் சந்தையின் முன்னணியாளராகத் திகழ்வதற்கு முக்கிய பங்கு வகித்த INSEE Cement இன் சில்லறை விற்பனை பங்குதாரர்களின் சிறந்த பங்களிப்புக்கான அங்கீகாரமாக அமைந்தது. நாடு முழுவதிலும் உள்ள INSEE Cement இன் சில்லறை விற்பனை பங்குதாரர்களில் சிறப்பான செயற்பாடுகள் இந்நிகழ்வில் கொண்டாடப்பட்டதுடன், அவர்களுக்கு 32 விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. நிறுவனத்தின் இரு முன்னணி வர்த்தக நாமங்களான சங்ஸ்தா மற்றும் மகாவலி மரைன் பிளஸ் ஆகியவற்றுக்கு வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை எடுத்துக் காட்டுவதால் இந்த அங்கீகாரம் விசேடமானதாக அமைந்துள்ளது. அவர்களின் சிறந்த செயல்திறன் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட விருதுகள் மூலம் சில்லறை விற்பனையில் வெற்றியை ஈட்டுவதில் வர்த்தக நாமம் வகிக்கும் பங்கு மேலும் வலுப்படுத்தப்படுகின்றது.
இந்த வருடத்தின் சிறந்த வணிகப் பங்காளர் விருது லஹிரு
என்டர்பிரைசஸ்/ஆர்.டபிள்யூ.ஹோல்டிங் கொட்டாவ ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களின் சிறந்த செயல்திறன் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புக்கு அங்கீகாரத்தை வழங்கி, INSEE பங்காளர்களுக்குக் காணப்படும் போட்டித் தன்மையின் நன்மைகள் மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
விசேட தேசிய பிரிவின் கீழ் எம்பிலிப்பிட்டிய – எம்பிலிப்பிட்டய வெயார்ஹவுஸ் நிறுவனம் வருடத்தின் மிகவும் வளர்ச்சியடைந்த நிறுவனத்திற்கான விருதைப் பெற்றுக் கொண்டது. அத்துடன், அதிக தொகுதிகளை விற்பனை செய்தமைக்கான விருதை பிலிமத்தலாவ – புதிய சென்ட்ரல் ஹார்வெயர் பெற்றுக் கொண்டது. இந்த வெற்றிக் கதைகள் INSEE இன் வணிக பங்காளர் வலையமைப்பிற்குள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பிரதிபலிக்கின்றன.
விரிவான ஒத்துழைப்புமிக்க கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த வாய்ப்புக்கள் மூலமான பரஸ்பர வளர்ச்சி மற்றும் வெற்றியின் ஊடாக பலமான கூட்டாண்மையை ஏற்படுத்துவதில் INSEE கொண்டிருக்கும் அர்ப்பணிப்பைப் பறைசாற்றும் வகையில் இந்த விருது நிகழ்வு அமைந்திருந்தது. 'எல்லைகளுக்கு அப்பால் அல்லது வெற்றிக்கும் அப்பால் என்ற தொனிப்பொருளானது ஒன்றிணைந்த சிறப்பின் ஊடாக எல்லைகளைத் தாண்டிச் சென்று உத்வேகம் தரும் புதிய அடிவானத்தை அடைதல் என்ற நிறுவனத்தின் நோக்கத்தை வலியுறுத்துகின்றது.
INSEE Cement இன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏக்கநாயக்க குறிப்பிடுகையில், “எமது வணிகப் பங்காளர்கள் INSEE Cement இன் வெற்றியின் ஓர் அங்கமாகும். சிறப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான ஒத்துழைப்பு என்பன சீமெந்து தொழில்துறையில் INSEE இலங்கையின் முன்னணியாளர் என்ற நிலையை தொடர்ந்தும் பேணுவதில் முக்கியமாக அமைகின்றது. அந்தக் கூட்டாண்மை என்பது வணிகம் என்பதற்கு அப்பால் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது, வளர்ச்சியை உத்வேகப்படுத்துவது மற்றும் ஒன்றாக இணைந்து இலங்கையின் கட்டுமானத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பது என்பதாக அமைகின்றது. எங்கள் பங்காளர்கள் சிறந்த நிலையை அடைவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் மற்றும் அதற்கான வாய்ப்புக்களை வழங்குவதில் நாம் உறதியாக இருக்கின்றோம்” என்றார்.
அதிக கேள்வி நிறைந்த INSEE சங்ஸ்தா மற்றும் INSEE மஹாவலி மரைன் பிளஸ் சீமெந்து ஆகிய சீமெந்து வர்த்தக நாமங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்துறையின் முன்னணி நிறுவனமான சியாம் சிட்டி சீமெந்து பப்ளிக் லிமிடட் நிறுவனத்தின் அங்கமே INSEE Cement ஆகும். துறைசார் நிபுணத்துவத்தைக் கொண்ட நிறுவனத்தின் குழு உள்நாட்டு கட்டுமானத் துறையை அதிக செயல்திறன் கொண்ட, குறைந்த கார்பன் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள கட்டுமானங்களை நோக்கி வழிநடத்துவதற்கான அர்ப்பணிப்புடன் உள்ளது. அதே நேரத்தில் பங்காளர்களுக்கு சந்தையில் நிலையான வளர்ச்சி வாய்ப்புக்கள் மற்றும் போட்டிக்கான நன்மைகளை வழங்குகின்றது.