வணிகம்
சியெட் இலங்கையின் போக்குவரத்துத் துறையின் விருத்திக்கு 'லோட் மேக்ஸ் ப்ரோ' தொடர் டிரக் டயர்கள் அறிமுகம் மூலம் உதவுகிறது

Mar 11, 2025 - 09:26 AM -

0

சியெட் இலங்கையின் போக்குவரத்துத் துறையின் விருத்திக்கு 'லோட் மேக்ஸ் ப்ரோ' தொடர் டிரக் டயர்கள் அறிமுகம் மூலம் உதவுகிறது

நாட்டின் ட்ரக் மற்றும் இலகு ட்ரக் டயர் சந்தையில் சியெட் வர்த்தக நாமத்தின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் போக்குவரத்துத் துறையில் செலவு மற்றும் செயல்திறன் இயக்கவியலை மாற்றக்கூடிய அதிநவீன டயர் தொழில்நுட்பமானது சியெட் களனி ஹோல்டிங்ஸால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து புதிய சியெட் லோட் மேக்ஸ் ப்ரோ (Load Max Pro) தொடரின் அறிமுகமானது, மூன்று பயாஸ்-பிளை டயர் அளவுகளை சந்தைக்குக் கொண்டுவருகிறது, இது சரக்குகளைக் கொண்டு செல்வோருக்கு ஈர்க்கக்கூடிய மைலேஜை வழங்குகிறது, இது டயரொன்றுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2க்கும் குறைவான செலவினை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தத் தொடரின் முதல் இரண்டு அளவுகளான சியெட் லோட் மேக்ஸ் ப்ரோ 18++ 10.00-20 மற்றும் சியெட் லோட் மேக்ஸ் ப்ரோ 7.50-16 ஆகியவை அண்மையில் கொழும்பு சின்னமன் லேக்சைடு ஹோட்டலில் விற்பனையாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கான நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டன. 10.00 - 20 அளவுகளில் உள்ள சியெட் லோட் மேக்ஸ் ப்ரோ 18++ டயர், லங்கா அசோக் லேலண்ட் மற்றும் டாடா போன்ற கனரக டிரக்குகள், பிளாட்பெட்கள், எரிபொருள் பவுசர் டிரக்குகள் மற்றும் சிமென்ட் கேரியர்களுக்கு பொருத்தமானவையாகும்.அதே வேளை சியெட் லோட் மேக்ஸ் ப்ரோ 7.50-16 அளவுள்ளவை Isuzu Elf, Mitsubishi Fuso Canter Fe/Fg, Tata Marco Polo, Eicher Skyline போன்ற இலகுரக டிரக்குகளுக்கானவையாகும். இந்த டயர்கள் நீண்டகாலம் நீடித்து உழைக்கும் தன்மை, அதிக சுமை தாங்கும் திறன், சீரான அழுத்த தன்மை,அதிக நிலைத்தன்மை மற்றும் திசைமாற்றி கட்டுப்பாடு ஆகியவற்றை வழங்குகின்றன, மேலும் பயனாளிகள் டயரை பலமுறை புத்தம் புதிது போன்று மீண்டும் சீர் செய்ய அனுமதிப்பதுடன் டயர்களுக்கான ஒட்டுமொத்த செலவுகளையும் குறைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சமீபத்திய தயாரிப்பு குறித்து சியெட் களனியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு ஷமல் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், சியெட் லோட் மேக்ஸ் டயர் தொடரானது இலங்கையின் போக்குவரத்துத் துறையானது நம்பகத்தன்மை மற்றும் வினைத்திறனுடன் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிசெய்வதுடன் புத்தாக்கம் மற்றும் சிறப்பிற்கான சியெட் களனியின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். இந்த அறிமுகத்தின் மூலம், சியெட் ஆனது அதிக விற்பனையான வர்த்தக நாமமாகவும், போக்குவரத்துத் துறையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான தெரிவாகவும் தனது நிலையை வலுப்படுத்துகிறது. 

இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சத வீதத்தை உற்பத்தி செய்யும் சியெட் கூட்டு முயற்சியில் இலங்கையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 8.5 பில்லியனுக்கு மேற்பட்ட முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் அதன் உற்பத்திகளில் சுமார் 20 வீதத்தை உலகின் 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு அந்நிய செலவாணிகளை சேகரிக்கும் விடயத்திலும், இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீதான சார்பு நிலையிலிருந்து விடுவிற்;பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05