மலையகம்
பொரலந்த பகுதியில் கார் விபத்து - மூவருக்கு காயம்

Mar 11, 2025 - 10:43 AM -

0

 பொரலந்த பகுதியில் கார் விபத்து - மூவருக்கு காயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பொரலந்த பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ் விபத்து நேற்று (10) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகவும், கந்தபளையில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த காரொன்ரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பலத்த மழையுடன் கூடிய வானிலை காரணமாக கார், வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியில் இருந்து தேயிலை தோட்டத்தில் சுமார் 50 மீட்டர் அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது, காரில் பயணித்த 3 பேர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

குறித்த விபத்தினால் கார் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05