Mar 11, 2025 - 11:18 AM -
0
இலங்கையின் மிகப்பெரிய வண்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தியாளரும், Asian Paints Group இன் கீழ் அங்கம் வகிக்கின்ற நிறுவனமுமான Asian Paints Causeway, அண்மையில் கொழும்பு BMICH இல் நடைபெற்ற Architect 2025 கண்காட்சியில் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. Sri Lanka Institute of Architects (SLIA) ஏற்பாடு செய்த Architect 2025 மூன்று நாள் கண்காட்சியானது, கட்டடக் கலைஞர்கள், உள்ளக வடிவமைப்பாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், தொழில்துறை வல்லுநர்கள், கட்டடக்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 6,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இக்கண்காட்சியில் Asian Paints Causeway அதன் இரண்டு விரிவான கூடங்களில் தனித்துமாக காட்சியளித்தது. வருகை தந்த பார்வையாளர்களுக்கு தமது விரிவான தயாரிப்பு வகைகளை காட்சிப்படுத்தியதோடு, பங்குபற்றலுடனான செயற்பாடுகளையும் நிபுணர் ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்கியது.
இந்நிகழ்வு குறித்து Asian Paints International Pvt. Ltd. பிராந்தியத்திற்கான தலைவர் சிரீஷ் ராவ் கருத்து வெளியிடுகையில், “Architect 2025 என்பது உள்ளூர் கட்டுமானத் துறைக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். Asian Paints Causeway இக்கண்காட்சியில் பங்குபற்றியது சந்தையில் எமது தலைமைத்துவத்தை பிரதிபலித்தது. இந்த கண்காட்சித் தளமானது, தொழில்துறை வல்லுநர்கள், பங்குதாரர்கள் மற்றும் நுகர்வோருடன் நேரடியாக தொடர்புறுவதற்கு எமக்கு உதவியது. இது எமது வர்த்தகநாமத்தின் தாக்கத்தை அவர்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியது. எமது அர்ப்பணிப்புள்ள குழு மற்றும் எமது மாறுபட்ட கூடத்தின் அனுபவம் ஆகியன Asian Paints Causeway வர்த்தகநாமத்தை இக்கண்காட்சியில் தனித்துவமாக அடையாளப்படுத்த உதவியது. என்றார்.
Asian Paints Causeway இன் நீர்புகாத அம்சம் கொண்ட தயாரிப்புகள் பார்வையாளர்களை ஈர்த்ததோடு, எமது ஆலோசனை நிபுணர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே நீண்ட மற்றும் நுண்ணறிவுமிக்க கந்துரையாடல்களுக்கு வழிவகுத்தது. SLIA இனால் அங்கீகரிக்கப்பட்டு SLS மற்றும் Green certification (பசுமை சான்றிதழ்) மூலம் அங்கீகாரம் பெற்ற இத்தயாரிப்புகள், அவை கொண்டுள்ள நிரூபிக்கப்பட்ட செயற்றிறன் மற்றும் தொழில்துறை அங்கீகாரம் ஆகியன நுகர்வோரின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தின.
இக்கண்காட்சியில் அதிக கூட்ட நெரிசல் கொண்ட ஒரு பகுதியாக Asian Paints Causeway இன் மரத் தோற்ற பூச்சுகள் (wood finishes) அமைந்திருந்தது. இத்தயாரிப்பு வகைகளின் உயர்ந்த ஆயுள், அழகியலின் ஈர்ப்பு மற்றும் பயன்பாட்டு செயன்முறையை ஆராய்வதில் பார்வையாளர்கள் ஆர்வமாக இருந்தனர். இதேவேளை, நவீன வீட்டு உரிமையாளர்கள் மற்றும் நிபுணர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான வண்ணப்பூச்சு சேவையான Safe Painting, அதன் மேலதிக மதிப்பு சேர்க்கப்பட்ட அம்சங்கள் மற்றும் தொந்தரவு அற்ற தீர்வுகள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றதால், மிகுந்த ஆர்வத்தை அவை ஏற்படுத்தியிருந்தன.
Asian Paints Causeway இன் நேர்த்தியான உள்ளக வடிவமைப்புகளுக்கான நிறப்பூச்சுகளை வெளிப்படுத்தும் Royale Play ஆனது, கண்காட்சிக் கூடத்தில் ஒரு கவர்ச்சிகரமான ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் தனித்துவமான அமைப்புகளையும் தோற்றங்களையும் நேரடியாகத் தொட்டு உணரவும், அது தொடர்பான அனுபவத்தை பெறுவதிலும் பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டனர். வண்ண மாதிரிகளைக் கொண்ட காட்சிப்படுத்தல்கள் அர்த்தமுள்ள எடுத்துக்காட்டாக இருந்தன. கட்டடக் கலைஞர்கள், மாணவ கட்டடக் கலைஞர்கள் மற்றும் நுகர்வோர், உள்ளக மற்றும் வெளியக சுவர்களுக்கு ஏற்ற வண்ணங்களின் சேர்க்கைகளை ஆராய்ந்து தெரிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. Architect 2025 கண்காட்சியில் நிறுவனத்தின் பங்கேற்பானது, தொழில்துறை வல்லுநர்களிடமிருந்து அதிகளவான பயிற்சி கோரிக்கைகளையும், அதன் தயாரிப்புகளுக்கான அதிக கேள்வியையும் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பாளர்கள் சமூகத்திற்குள் உறவுகளை வலுப்படுத்தவும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்குமான ஒரு அற்புதமான தளமாக இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது.
சந்தையில் முன்னணியில் உள்ள தலைவன் எனும் வகையில், இலங்கையின் கட்டுமானத் துறையில் புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்தை மேம்படுத்துவதில் Asian Paints Causeway அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது. நீடித்து உழைக்கும் தன்மை, அழகியல் மற்றும் செயற்பாட்டு ரீதியான முக்கியத்துவம் ஆகியவற்றை மீள்வரையறை செய்து, உயர்ந்த செயல்திறன் மிக்க தீர்வுகளை நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.