செய்திகள்
எல்பி எரிவாயு விலை குறித்து வௌியான அறிவிப்பு

Mar 11, 2025 - 04:31 PM -

0

எல்பி எரிவாயு விலை குறித்து வௌியான அறிவிப்பு

அடுத்த சில ஆண்டுகளில் உலக சந்தையில் எல்பி எரிவாயுவின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று உலக எல்பி எரிவாயு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

உலக சந்தையில் எரிவாயுவின் விலை மெட்ரிக் தொன்னுக்கு 600, 700 மற்றும் 800 அமெரிக்க டொலர்களுக்கு இடையில் இருக்கும் அதன் பணிப்பாளர் டேவிட் டைலர் தெரிவித்தார். 

இருப்பினும், அது ஆயிரம் டொலர் மதிப்பை எட்டாது என நம்புவதாக டேவிட் டைலர் சுட்டிக்காட்டினார். 

லாஃபிங் கேஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். 

இந்நாட்டின் எல்பி எரிவாயுவின் விலை சவுதி 'எரம்கோ' விலைக் சுட்டெண்ணால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், அந்தக் சுட்டெண்ணின் விலை தற்போது 650 முதல் 700 அமெரிக்க டொலர்கள் வரை ஏற்ற இறக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05