Mar 11, 2025 - 05:26 PM -
0
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போலன் நகரில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் ரயிலை பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army - BLA) என்ற கிளர்ச்சி அமைப்பு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அதில் 120-க்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் ஆறு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மகளிர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பயணிகளை விடுவித்ததாகவும் BLA தெரிவித்துள்ளது.
மேலும், இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பணயக்கைதிகளை கொல்லப்போவதாக BLA எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.