Mar 11, 2025 - 05:36 PM -
0
கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்கு சென்று பரீட்சை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளை பெறலாம் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் இருந்தால், இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை அபிவிருத்தி மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவசர தொலைப்பேசி இலக்கம்- 1911
தொலைபேசி இலங்கங்கள் - 0112784208, 0112784527, 0112785922, 0112784422