சினிமா
ஒன்றுகூடிய தளபதி பாய்ஸ்

Mar 11, 2025 - 05:50 PM -

0

ஒன்றுகூடிய தளபதி பாய்ஸ்

தளபதி விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், ப்ரியாமணி, கவுதம் மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

 

மேலும் ஸ்ருதி ஹாசன் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இப்படத்திலிருந்து first லுக் மற்றும் second லுக் போஸ்டர்கள் வெளிவந்த நிலையில், அடுத்ததாக முதல் பாடல் எப்போது வெளிவரும் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் கூறுகின்றன.

 

இவர்கள் மூவருடனும் விஜய் இணைந்து பணியாற்றியுள்ளதால், இவர்களை தளபதி பாய்ஸ் என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். இப்படியிருக்க விஜய்யின் கடைசி படத்தில் இவர்கள் மூவரும் இணைந்து விஜய்யுடன் நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05