செய்திகள்
நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

Mar 11, 2025 - 11:15 PM -

0

நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளைய தினம் (12) நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.


அதன்படி, நாளை காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிபகிஷ்கரிப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

 

இன்று (11) பிற்பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நேற்றிரவு (10)  அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.


இதற்கு நீதி கோரி, வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், இச்சம்பவத்திற்கு எதிரான கண்டனமாகவும் GMOA இந்த பணிப்பகிஷ்கரிப்பை அறிவித்துள்ளது.


மேலும், இது போன்ற சம்பவங்கள் வைத்தியர்களுக்கு, குறிப்பாக பெண் வைத்தியர்களுக்கு பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துவதாகவும், அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் GMOA வலியுறுத்தியுள்ளது.


இதனால், GMOA உறுப்பினர்கள் தனியார் பயிற்சி மற்றும் மாற்று பணிகளைத் தவிர்த்து, ஒருமைப்பாட்டுடன் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05