Mar 12, 2025 - 10:20 PM -
0
பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மஹ்மதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான மஹ்மதுல்லா கடந்த ஆண்டு T20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021இல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்துள்ளது.
மஹ்மதுல்லா 50 டெஸ்ட், 239 ஒருநாள் மற்றும் 141 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டியில் 5 சதங்களுடன் 2,914 ஓட்டங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களுடன் 5,689 ஓட்டங்களும், T20 கிரிக்கெட்டில் 2,444 ஓட்டங்களும் பெற்றுள்ளார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 43, ஒருநாள் கிரிக்கெட்டில் 82, T20 கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.