Mar 14, 2025 - 11:58 AM -
0
அமெரிக்க மதுபானங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் 50 சதவீதம் வரிவிதித்தால், ஐரோப்பிய நாட்டின் மதுபானங்களுக்கு அமெரிக்கா 200 சதவீதம் வரி விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் மேலதிக வரி விதித்துள்ளதாகவும், இந்த வரி விதிப்பு ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய நாடுகள் 50% வரி விதித்தால், ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200% வரி அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மேலதிக வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் வைன்கள் மற்றும் மதுபான பொருட்களுக்கு 200% வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.