Mar 14, 2025 - 02:57 PM -
0
NDB வங்கியானது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 ஆம் திகதி வங்கியின் வளாகத்தில் வங்கியில் அரலிய பெண்கள் கணக்கு வைத்திருப்பவர்கள் சுமார் 200 பேரை ஒன்றிணைத்த ஒரு சிறப்பு நிகழ்வான அரலிய மருத்துவ முகாமை நடத்தியது. இந்த முயற்சியானது, பெண்கள், தங்களது சுகாதாரப் பராமரிப்பு, நல்வாழ்வுக்கான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்டது . NDB வங்கியானது இந்த அரலிய மருத்துவ முகாமில், முக்கிய சுகாதாரப் பங்காளர்களுடன் இணைந்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது..இதற்கிணங்க நைன்வேல்ஸ் மருத்துவமனையானது பூரண மருத்துவப் பரிசோதனைகளை வழங்கியது, இதில் பூரண குருதி எண்ணிக்கை (FBC), இரத்தக் கொழுப்புவகைப் பரிசோதனை[Lipid Profile] காலை உணவுக்கு முன்னான இரத்தச் சர்க்கரை[Fasting Blood Sugar], சீரம் இரும்புச் சோதனைகள், SGPT, சிறுநீர் பரிசோதனைகள், HbA1C மற்றும் மருத்துவர் ஆலோசனைகள் ஆகியவை அடங்கும். இந்த விரிவான பரிசோதனைகள், பங்கேற்பாளர்கள் தமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த பெறுமதியான விழிப்புணர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கியது, இது நோய் தடுப்பு பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதாக அமைந்திருந்தது.
மேலதிகமாக , விஷன் கெயார் நிறுவனமானது பார்வை பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய கண் பரிசோதனை சேவைகளை வழங்கியது. மேலும் ஃபொன்டெரா நிறுவனமானது, அதன் அன்லீன் தயாரிப்பு வரிசையின் மூலம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக வயது வந்தோருக்கான ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகளை வழங்கியது. அத்துடன் இந்நிகழ்வில் லிங்க் நேச்சுரல் புரொடக்ட்ஸ் நிறுவனமானது அதன் சுதந்த பற்பசையை அறிமுகப்படுத்தியதுடன் இதனுடன் இணைந்ததாக வாய்வழி பராமரிப்பு விழிப்புணர்வு அமர்வுகள் மற்றும் இலவச பல் பரிசோதனைகளை வழங்கியது. ஹேமாஸ் நிறுவனமானது அதன் குமாரிகா உற்பத்திகளின் வரிசையுடன் இந்த நிகழ்வில் இணைந்ததன் மூலம் தலைமுடி பராமரிப்பு விழிப்புணர்வு, தயாரிப்பு மாதிரி மதிப்பாய்வு மற்றும் நடமாடும் சிகை அலங்கார நிலைய சேவை ஆகியவற்றை வழங்கியது.
பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய NDB வங்கியின் மொத்த விற்பனை வங்கியியல் துணைத் தலைவர் இஷானி பல்லியகுரு, தமது பெண் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மதிப்பை உருவாக்கும் வங்கியின் இலக்கை வலியுறுத்தினார், “அரலிய மூலம், பெண்களின் தனித்துவமான தேவைகள் மற்றும் அபிலாஷைகளை நாம் எப்போதும் முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்களை மேம்படுத்துவதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.”
பெண்களை வலுப்படுத்துவதுடன் ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு NDB மேற்கொண்டுள்ள பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அரலிய மருத்துவ முகாம்அமைந்திருந்தது. ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தமது கணக்குகளைப் பராமரித்து வரும் நீண்டகால அரலிய கணக்கு உரிமையாளர்களுக்கு, வங்கியின் பகுதி செலவில் ஆய்வு நிலைய சோதனைகளை மேற்கொள்ளும் வாய்ப்பை NDBயானது நீடித்துள்ளது. ஆண்டு முழுவதும் செயற்படுத்தப்படவுள்ள இந்த முயற்சியானது, அதன் அரலிய வாடிக்கையாளர்கள் நிதியுதவியை பெறுவதுடன் மட்டுமல்லாது, அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்குத் தேவையான வளங்களையும் பெறுவதை உறுதி செய்வதில் வங்கியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.