Mar 14, 2025 - 03:29 PM -
0
உலகின் மாபெரும் சாகச பிரயாண ஏற்பாட்டு நிறுவனமான Intrepid Travel, தனது மாபெரும் சர்வதேச மாநாட்டு நிகழ்வை இலங்கையில் (பெப்ரவரி 24 - 27) வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த 200 சர்வதேச அணியினரை அழைத்து வந்திருந்ததுடன், 300 உள்நாட்டு அணி அங்கத்தவர்களும் ஈடுபட்டிருந்தனர். இந்நிகழ்வு சுமார ஒரு வாரம் வரை நடைபெற்றதுடன், கைகோர்ப்பு மற்றும் கொண்டாட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
அவுஸ்திரேலியாவின், மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள தலைமையகத்துக்கு அப்பால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது தடவையாக இது அமைந்துள்ளது. கொழும்பிலுள்ள Intrepid இன் அணி, சர்வதேச ரீதியில் காணப்படும் மிகப்பெரிய அணியாக அமைந்துள்ளதுடன், இலங்கையில் பிரயாண செயற்பாடுகளில் பெருமளவு ஆதரவை வழங்குவதுடன், சர்வதேச வியாபாரத்துக்கு பகிரப்பட்ட சேவைகளையும் வழங்குகிறது. இந்த மாநாட்டினூடாக இலங்கையின் பொருளாதாரத்தில் ரூ. 50 மில்லியனுக்கு அதிகமான தொகை பங்களிப்பு செய்யப்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. Intrepid இன் பணிப்பாளர் சபை, இணை ஸ்தாபகர்கள் மற்றும் பிரதான முகாமைத்துவ அணியினரைக் கொண்டு, ஒரு வார காலம் நடைபெற்ற ஒன்றுகூடல்கள் BMICH இல் முழு நாள் மாநாடாக அமைந்திருந்தன. இதில் உலகளாவிய ரீதியிலிருந்து 2500க்கு அதிகமான ஊழியர்கள் மற்றும் வியாபார தலைவர்கள் நேரலையாக இணைந்து கொள்ள அழைக்கப்பட்டனர். ஒற்றை பாவனை பிளாஸ்ரிக் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் மீள்சுழற்சியை ஊக்குவிப்பதற்கான நிதிதிரட்டல், சமூக ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளுக்காக Intrepid மையத்தின் உள்ளுர் பங்காளரான Zero Plastic Movement உடன் இணைந்த செயற்பாடுகள் அடங்கிய நோக்கங்களும் வாரம் முழுவதிலும் நடைபெற்ற நிகழ்வுகளில் உள்ளடங்கியிருந்தன.
Summit தின நிகழ்வுகள் Intrepid இன் புதிய வர்த்தக நாம அமைவிடத்தை உணர்த்துவதாக அமைந்திருந்ததுடன், சுற்றுலா தலைமை செயற்பாட்டாளர்கள் அடங்கலாக 45 க்கும் அதிகமான பேச்சாளர்களை மேடையில் கொண்டிருந்தது. இதனை Intrepid இன் சர்வதேச அணியான ‘top talent’ ஆக கௌரவிக்கப்பட்டிருந்த பெரு பொது முகாமையாளர் பெர்னான்டோ ரொட்ரிகுஸ் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட தயாரிப்பு முகாமையாளர் பிரமாலி பெர்னான்டோ ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.
இதன் போது சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. அதில், புதிய அலுவலகங்களை திறந்து தனது சர்வதேச பிரசன்னத்தை Intrepid விரிவாக்கம் செய்யும், இதில் தற்போதுள்ள 28 அலுவலகங்கள் ஆகக்குறைந்தது 33ஆகவேனும் அடுத்த 12 மாதங்களினுள் உயர்த்தப்படும். மேலும், 2027 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளில் மேலும் விஸ்தரிப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. Intrepid இன் தலைமை அதிகாரி டெரல் வேட் அவர்களால், நிறுவனத்தினால் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் பங்கிலாபங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தி, ஊழியர் பங்கு உடைமை திட்டத்துக்கு ஆதரவளிப்பு பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார். இதில் இலங்கை அடங்கலாக, 12 நாடுகளின் 555 ஊழியர் பங்குதாரர்கள் அடங்கியுள்ளனர். மேலும், போனஸ் கொடுப்பனவுகள் மற்றும் பங்குகள் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட போனஸ்கள் போன்றன தகைமை வாய்ந்த ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டன.
பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் தோர்ன்டன், 2024 ஆம் ஆண்டில் அணியினரின் சிறந்த செயற்பாடுகளை பாராட்டியிருந்ததுடன், எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை பற்றியும் அறிவித்திருந்தார். இம்மாதத்தின் பிற்பகுதியில் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கையும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. புதிய திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு, எதிர்கால தலைவர்களின் விருத்தியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. Intrepid இன் முதலாவது பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹேசல் மெக்கிரே அவர்களின் நியமனத்தை தொடர்ந்து, நிறுவனத்தின் சர்வதேச சந்தைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி மூலோபாய செயற்பாடுகள் போன்றவற்றுக்கு அவர் பொறுப்பாக செயலாற்றுவார். சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கீர்த்தி நாமமிக்க வர்த்தக நாமமாக திகழச் செய்வது அவரின் நோக்காகும். மெக்கிரி தற்போது, Intrepid இன் ஐக்கிய இராஜ்ஜிய விற்பனைகள் மறறும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளராக திகழ்வதுடன், அவரின் புதிய நியமனத்தை தொடர்ந்து, சர்வதேச ரீதியில் துரிதப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. முன்னாள் பிரதம வாடிக்கையாளர் அதிகாரி லெய் பார்ன்ஸ், அமெரிக்காவின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பதவி வெற்றிடம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இந்த மாநாட்டை முதன் முறையாக ஏற்பாடு செய்திருந்ததை தொடர்ந்து, அதன் அங்கமாக, Hello Zero யானை உருத்தோற்றம், பிளாஸ்ரிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டு, Intrepid மையத்தின் Zero Plastic Movement C இனால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் பாரம்பரியத்துக்கும் வனஜீவராசிகளுக்கும் பிளாஸ்ரிக் கழிவுகளால் ஏற்படுத்தப்படும் பாரதூரமான தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இந்த நடவடிக்கை அமைந்திருந்ததுடன், இது BMICH இன் வரவேற்பு பகுதியில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.