Mar 14, 2025 - 05:39 PM -
0
இன்று (14) நுவரெலியா தேர்தல் திணைக்களத்தில் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தலைமையில் சந்திரசேகரன் மக்கள் முன்னணி, அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பல சபைகளுக்கும் ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன்
இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் எங்களுடைய தனித்துவத்தை நிரூபிப்பதற்காகவும் புதிய இளைஞர்களுக்கான வாய்ப்பை வழங்குவதற்காகவும் புதிய வேட்பாளர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் நாம் தனித்துவமாக தபால் பெட்டி சின்னத்தில் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்க தயாராக இருக்கிறோம்.
உள்ளூராட்சி சபைகளாக நகர சபைகளிலும் பிரதேச சபைகளிலும் எங்களுடைய வேட்பாளர்கள் அதுவும் பலம் வாய்ந்த வேட்பாளர்கள், புதிய வேட்பாளர்கள் களமிறங்க தயாராக இருக்கிறார்கள்.
இதன் மூலமாக உள்ளூராட்சி சபைகளில் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை பெற்று அதன் மூலமாக மலையக மக்களுக்கு எங்களால் முடிந்த சேவைகளை செய்ய தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
--