Mar 14, 2025 - 05:50 PM -
0
18 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டுமே இன்னும் அணி தலைவரை அறிவிக்காமல் இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் அணி தலைவரைகளில் மாற்றம் இல்லை.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும் (கடந்த சீசன் ஷ்ரேயாஸ் ஐயர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும் (டுபெலிஸ்), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும் (கே.எல்.ராகுல்), பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் (ஷிகர் தவான்) புதிய அணி தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் அணிதலைவர் தேர்வில் இருந்தது. இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். மேலும் அவர் தொடக்கத்தில் சில போட்டிகளை தனிப்பட்ட காரணங்களுக்காக தவற விடுகிறார்.
இந்நிலையில் அக்ஷர் படேலை டெல்லி அணியின் அணி தலைவரை அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அக்ஷர் படேல் 2019 ஆம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவர் 18 ரூபா கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அக்ஷர் படேல் ஐ.பி.எல்.லில் 150 ஆட்டத்தில் விளையாடி 1,653 ஓட்டங்களை எடுத்துள்ளார். 123 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கடந்த சீசனில் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் அணி தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.