செய்திகள்
பெண் வைத்தியர் விவகாரம் - சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Mar 14, 2025 - 05:53 PM -

0

பெண் வைத்தியர் விவகாரம் - சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments
0

MOST READ