Mar 14, 2025 - 06:07 PM -
0
பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கம் (ACCA) அண்மையில் நடத்திய நிலைபெறுதகுதன்மை அறிக்கையிடல் விருதுகள் - 2025 நிகழ்வில் கொமர்ஷல் வங்கியானது அதன் 2023 வருடாந்த அறிக்கையில் நிலைபெறுதகுதன்மை தொடர்பான தகவல்களை பங்குதாரர்களுக்கு விரிவாக வெளிப்படுத்தியமையை அங்கீகரிக்கும் வகையில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.
இதற்கிணங்க கொமர்ஷல் வங்கியானது இந்த விருதுகள் நிகழ்வில் ஒட்டுமொத்த ரன்னர்-அப் விருதினை பெற்றதுடன் மற்றும் வங்கியியல் பிரிவில் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வங்கியானது அதன் 2022 ஆம் ஆண்டறிக்கையில் இதேபோன்ற சாதனையை நிகழ்த்தியமைக்காக கடந்த வருடமும் ACCA ஆல் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ACCA நிலைபெறுதகு தன்மை அறிக்கையிடல் விருதுகள் உள்ளக மற்றும் வெளியக பங்குதாரர்களுக்கு வர்த்தகத்தின் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களை தெளிவாக விளக்குவதுடன், நிலையான வளர்ச்சியின் இலக்கை நோக்கி நிறுவனத்தின் கொள்கைகள், இலக்குகள் மற்றும் நீண்டகால நோக்கங்களை வெளிப்படுத்தும் வருடாந்த அறிக்கைகளை அங்கீகரிக்கின்றன.
இதேவேளை கொமர்ஷல் வங்கியின் 2023 வருடாந்த அறிக்கையானது CA ஸ்ரீலங்காவின் TAGS விருதுகள் 2024 இல் விருதுகள் திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய அம்சங்களான வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கியமைக்காக இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருதுகளையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
கொமர்ஷல் வங்கியின் 2023 ஆண்டறிக்கையானது அதன் ஒட்டுமொத்த 55வது அறிக்கையாக திகழ்வதுடன் மேலும் இது பசுமை இல்ல வாயு (GHG) நடுநிலைமையை பிரதிபலிக்கிறது. இது 2023ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் செயல்திறன் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.