Mar 14, 2025 - 09:37 PM -
0
அரசாங்க தொழில் வழங்குவதாகக் கூறி 500,000 ரூபாவுக்கு மேல் இலஞ்சம் பெற்ற பெண் உள்ளிட்ட இருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளளனர்.
குட்டிகல, பதலங்கல பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசாங்க தொழில்களை பெற்றுக்கொடுப்பதாக கூறி, நான்கு நபர்களிடமிருந்து 505,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
அதன்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஆண் சந்தேகநபர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பெண் சந்தேகநபர் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.