Mar 14, 2025 - 10:09 PM -
0
அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் பிரயோகம் இடம்பெற்ற இடத்தின் வீடியோ காட்சிகள் தற்போது 'அத தெரண'வுக்கு கிடைத்துள்ளன.
இன்று (14) மாலை 6.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், 'பொடி சுத்தா' என்று அழைக்கப்படும் 39 வயதான திரிமதுர சமன் கிருஷாந்த மெண்டிஸ் என்பவரே துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டார்.
குளீகொட, இடன்தொட்ட பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், இன்று மாலை அம்பலாங்கொடை நகரத்திற்கு பேருந்தில் ஏறுவதற்காக இடந்தோட்டை சந்தியில் காத்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த நிலையில், பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.