வடக்கு
கிளிநொச்சியில் 97.02 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

Mar 14, 2025 - 10:25 PM -

0

கிளிநொச்சியில் 97.02 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில் 97.02 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. 37 குடும்பங்களே இன்னும் மீள் குடியேற்ற வேண்டிய தேவையுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். 

மாவட்டத்தில் 97.2 வீதமான நிலப்பரப்பில் இதுவரை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. 2.7 வீதமான நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் அகற்ற வேண்டிய தேவையுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் முகமாலை கிராம அலுவலர் பிரிவிலேயே குறித்த 2.7 வீதமான பகுதிகள் அகற்றப்படாமையுள்ளன. 

இதனால் 37 குடும்பங்களை மீளக்குடியமர்த்த முடியாத நிலை காணப்படுவதாகவும் கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களுடன் நடைபெற்ற இரண்டு கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் கண்ணிவெடி அகற்றிய பிரதேசங்களை கையளிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார்கள். விரைவாக குறித்த 37 குடும்பங்களையும் மீளக் குடியமர்த்த முடியும் எனவும் நம்பிக்கை வௌியிட்டார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05