Mar 15, 2025 - 07:06 PM -
0
பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் விவகாரத்தில், பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட இராணுவ வீரர்கள் 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜீயாந்த் பலோச் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, கிளர்ச்சிப்படை மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுவதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
354 பணைய கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் இராணும் தெரிவித்துள்ளது.
மேலும், கிளர்ச்சி படையால் வேறு எந்த பணைய கைதிகளும் கொல்லப்பட்டதற்கோ, அழைத்து செல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.