செய்திகள்
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

Mar 17, 2025 - 07:19 AM -

0

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. 

நாடளாவிய ரீதியாக 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்தப் பரீட்சைக்கு 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 75,965 தனியார் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார். 

"உங்கள் அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டையை இப்போதே தயார் செய்து பரீட்சைக்கு எடுத்துச் செல்லுங்கள்." 

பரீட்சை எழுதும் ஒவ்வொரு வினாத்தாளுக்கும் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். முதல் நாளில் மண்டபத்தில் அனுமதி சீட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 

அது உங்களிடம் திருப்பித் தரப்படாது. அத்துடன் பரீட்சை எழுத பேனாக்கள் மற்றும் பென்சில்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு வரலாம். 

வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியாது. தேவைப்பட்டால், ஒருவருக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்துச் செல்ல முடியும். குறிப்பாக இதை நினைவில் கொள்ளுங்கள் " என்றார்.

பரீட்சை எழுதுபவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை மண்டபங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05