செய்திகள்
நெடுநாள் மீன்பிடி படகுகளில் தீ

Mar 17, 2025 - 09:06 AM -

0

நெடுநாள் மீன்பிடி படகுகளில் தீ

திக்வெல்ல - நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் இன்று (17) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளன. 

தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதுடன், திக்வெல்ல பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த நெடுநாள் படகுகளின் உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தீ பரவல் தொடர்பாக எவர் மீதும் சந்தேகம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05