சினிமா
விளக்கம் அளித்த பி.ஆர். டீம்

Mar 17, 2025 - 10:39 AM -

0

விளக்கம் அளித்த பி.ஆர். டீம்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மம்மூட்டி. அவரை பார்த்தால் 73 வயது என்றே சொல்ல முடியாத அளவுக்கு இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். இந்நிலையில் படங்களில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார்.

 

இதையடுத்து மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் தான் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை என சமூகவலைதளங்களில் பேச்சு கிளம்பியது. அதை பார்த்த சிலரோ மம்மூட்டிக்கு புற்றுநோய் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தெரிவித்தனர்.

 

மேலும் சிலரோ, மம்மூட்டி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு பேசி வந்த நிலையில் மம்மூட்டியின் செய்தித் தொடர்பாளர் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

 

மம்மூட்டி குறித்து அவரின் பி.ஆர். டீம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

 

மம்மூட்டிக்கு உடல்நலம் சரியில்லை என்பது பொய்யான தகவல். ரமலான் நோன்பு இருப்பதால் படங்களில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார். நோன்பு முடிந்த பிறகு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

 

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் படத்தில் மம்மூட்டி, நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் பூஜையுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கியது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் அந்த படத்தின் ஷூட்டிங் 150 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது.

 

 ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொச்சி, டெல்லி, அபுதாபி, அசர்பைஜான், தாய்லாந்து மற்றும் லண்டனில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள்.

 

16 ஆண்டுகள் கழித்து மம்மூட்டியும், மோகன்லாலும் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் இருவரையும் சேர்ந்து பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05