வணிகம்
NDB வங்கி ஸ்மார்ட் வங்கியியல் தீர்வான NDB Pixel யை பதின்ம வயதினருக்கும் பெற்றோருக்கும் அறிமுகப்படுத்துகிறது

Mar 17, 2025 - 11:34 AM -

0

NDB வங்கி ஸ்மார்ட் வங்கியியல் தீர்வான NDB Pixel யை பதின்ம வயதினருக்கும் பெற்றோருக்கும் அறிமுகப்படுத்துகிறது

NDB வங்கியானது 13 முதல் 17 வயதுக்குட்பட்ட இலங்கையின் பதின்ம பருவத்தில் உள்ளவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புத்தாக்கமான டிஜிட்டல் வங்கியியல் தீர்வான NDB Pixel ஐ பெருமகிழ்வுடன் அறிமுகப்படுத்துகிறது. இந்த முன்முயற்சியானது பணப்பரிவர்த்தனையற்ற சமுதாயத்தை விருத்தி செய்வதற்கும் , நாட்டின் டிஜிட்டல் மாற்ற இலக்குகளுடன் இணைவதற்கும், பாதுகாப்பான மற்றும் வசதியான நிதியியல் முகாமைத்துவத்திற்கான கருவிகளை இளைய தலைமுறையினருக்கு வழங்குவதற்குமான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான தளமாகும். 

இன்றைய வேகமான டிஜிட்டல் சகாப்தத்தில், ஆரம்ப நிதியியல் கல்வி மிகவும் முக்கியமானது. NDB Pixel ஆனது பதின்ம வயதினர் நம்பிக்கையுடன் தங்கள் நிதியியல் பயணத்தைத் தொடங்குவதற்கான ஒரு மாறும் தளத்தை வழங்குகிறது, கணக்கு வைத்திருப்பவர்கள் அங்கு NDB NEOSசெயலி மூலம், தங்கள் நிதிகளுக்கான நிகழ்நேர அணுகலைப் பெறுவதுடன் சுய அதிகாரம் மற்றும் நிதியியல் பொறுப்பை மேம்படுத்துகிறார்கள். தனிப்பயனாக்கப்பட்ட டெபிட் அட்டை , அன்றாடத் தேவைகளுக்கான பாதுகாப்பான, பணமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக்குவதுடன் பணத்தை சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. 

தமது பிள்ளைகளின் நிதியியல் பழக்கவழக்கங்களை வழிநடத்துவதில் பெற்றோர்கள் வகிக்கும் முக்கியப் பங்கை உணர்ந்து, NDB Pixel, பெற்றோரின் மேற்பார்வையை உறுதிசெய்யும் அம்சங்களை உள்ளடக்கியதாக திகழ்கிறது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கணக்கு நிலுவைகளைக் கண்காணிக்கலாம். மற்றும் பரிவர்த்தனைகளுக்கான உடனடி SMS விழிப்பூட்டல்களைப் பெறுவதுடன் கணக்கு நடவடிக்கைகளை மேற்பார்வையிடலாம்.அத்துடன் நிதியியல் கல்விக்கான கூட்டு அணுகுமுறையை வளர்த்துக்கொள்ள முடியும். 

NDB Pixel கணக்கு, பாரம்பரிய சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளிலிருந்து தனித்து விளங்குகிறது, எனவே இது சேமிப்புடன் பரிவர்த்தனை திறன்களையும் வழங்குகிறது. NDB NEOS உடன் டெபிட் அட்டை மற்றும் மொபைல் வங்கியியல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த டிஜிட்டல் வங்கிச் சேவைகளுடன், கணக்கு நடைமுறை நிதிக் கற்றலை வலியுறுத்துகிறது. மேலதிகமாக , பொறுப்பான செலவினங்களை ஊக்குவிப்பதற்காக அட்டையில் கொடுப்பனவுகளுக்காக முன் வரையறுக்கப்பட்ட அன்றாட பரிவர்த்தனை வரம்பு ரூ. 20,000 ஆக செயற்படுத்தப்பட்டுள்ளது, எனினும் இது பெற்றோரின் ஒப்புதலுடன் கோரிக்கையின் பேரில் மீள சரிசெய்யப்படலாம். 

NDB Pixel அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த NDB வங்கியின் Product Lifecycle Management உதவி துணைத் தலைவர் தமித சில்வா, NDB Pixel ஆனது அடுத்த தலைமுறையினருக்கு அவர்களின் நிதிகளை பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான கருவிகள் மற்றும் அறிவைக் கொண்டு வலுவூட்டுவதற்கான எம்மால் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும். பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதன் மூலம், இலங்கையின் பணமில்லாப் பொருளாதாரத்தை நோக்கி நாம் பங்களிக்கிறோம். 

NDB Pixel ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், இளைஞர்களிடையே நிதியியல் உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் NDB வங்கியானது உறுதிப்படுத்துகிறது. 

NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05