Mar 17, 2025 - 12:45 PM -
0
முன்னணி நிதித் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான First Capital Holdings PLC (குழுமம்), 2024 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் ரூ. 4.53 பில்லியனை மொத்த வருமானமாக பதிவு செய்து, சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்வை எய்துவது மற்றும் நிலைபேறான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் வருமானமான ரூ. 9.35 பில்லியன் பெறுமதி, இம்முறை குறைந்து செல்லும் வட்டி வீதங்கள் மற்றும் உள்நாட்டு கடன் சீராக்கங்களைத் தொடர்ந்து வலிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன், இக்குழுமம் தொடர்ந்தும் தனது நிதிசார் வலிமை மற்றும் மூலோபாய நிறைவேற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தது.
2024/25 முதல் ஒன்பது மாதங்களில் குழுமத்தின் செயற்பாட்டு செலவுகளுக்கு முன்னரான தேறிய வருமானம் ரூ. 7.69 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 17.90 பில்லியனாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலதன சந்தைகளில் ஒப்பற்ற முன்னோடியாக First Capital Holdings திகழ்வதுடன், சிறப்பு, புத்தாக்கம் மற்றும் நிதிசார் முதலீடுகளில் நிபுணத்துவம் ஆகியவற்றில் அதன் ஒப்பற்ற அர்ப்பணிப்புக்காக புகழையும் பெற்றுள்ளது. தொழிற்துறையில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான ஆதிக்கத்துடன், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சந்தையின் சிக்கல் நிலைகளிலிருந்து கடந்து செல்வதற்கான வலுவூட்டல்களை வழங்குவதுடன், வாய்ப்புகளை நிலைபேறான வளர்ச்சிக்கு மாற்றியமைக்கின்றது. அதன் தூர நோக்குடைய வழிமுறை மற்றும் ஒப்பற்ற சந்தை உள்ளார்ந்த அம்சங்களுடன், First Capital Holdings மூலதன சந்தைகளை வெறுமனே மாற்றியமைப்பது மட்டுமன்றி, எதிர்காலத்துக்கு புரட்சிகரமான பங்களிப்பை வழங்குகிறது.
மேலும், நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்துள்ளதுடன், சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, தொழிற்துறையினுள் நம்பிக்கையை ஊக்குவித்த வண்ணமுள்ளது. இந்த கௌரவிப்புகளினூடாக, சிறப்புக்கான First Capital இன் அர்ப்பணிப்பு மாத்திரம் வெளிப்படுத்தப்படாமல், அதன் நம்பகத்தன்மையை மேம்படுத்தி, சந்தையில் நம்பிக்கையை வென்ற முன்னோடி எனும் தனது நிலையை உறுதி செய்துள்ளது.
2024/25 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 2024/25 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவாகியிருந்த பிரதான நிதிசார் பெறுபேறுகளாவன:
பிரதான விற்பனையாளர் பிரிவு வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 2.45 பில்லியனை பதிவு செய்திருந்தது (2023/24 காலப்பகுதியில் இப்பெறுமதி – ரூ. 10.06 பில்லியன்). இந்த பெறுபேறுகளில், ரூ. 2.58 பில்லியன் பெறுமதியான அரசாங்க பிணை விற்பனையினூடாக கிடைத்த வருமதி மற்றும் தேறிய வட்டி வருமானமான ரூ. 1.30 பில்லியன் (2023/24 காலப்பகுதியில் அரச பிணைகளின் விற்பனையினூடாக கிடைத்திருந்த தேசிய வருமதி ரூ. 14.34 பில்லியன் என்பதுடன், தேறிய வட்டி வருமானம் ரூ. 2.64 பில்லியனாகும்) போன்றன அடங்கியிருந்தன.
கூட்டாண்மை நிதிசார் ஆலோசனை மற்றும் பிணைகள் கையாளல் பிரிவு வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 1.94 பில்லியனை பதிவு செய்திருந்தது (2023/24 காலப்பகுதியில் இப்பெறுமதி – ரூ. 77 மில்லியனாக காணப்பட்டது). வியாபார பிரிவின் பங்குகள் பிரிவின் ரூ. 2.23 பில்லியன் மதிப்பீட்டு அதிகரிப்பு இந்த பெறுமதி உயர்வில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது.
வெல்த் மனேஜ்மன்ட் பிரிவில் ரூ. 90 மில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது (2023/24 காலப்பகுதியில் இப்பெறுமதி – ரூ. 20 மில்லியனாகும்). 2024 டிசம்பர் 31 ஆம் திகதியன்று பிரிவின் கீழ் நிர்வகிக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி ரூ. 105.1 பில்லியனாக பதிவாகியிருந்தது (2024 மார்ச் 31 ஆம் திகதியன்று இந்தப் பெறுமதி – ரூ. 93.9 பில்லியனாக காணப்பட்டது). பங்கு முகவர் பிரிவு ரூ. 39 மில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது (2023/24 காலப்பகுதியில் இப்பெறுமதி – ரூ. 27 மில்லியனாக பதிவாகியிருந்தது).
First Capital Holdings PLC இன் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், "மாற்றமடைந்திருந்த சந்தை சூழலில் எமது பெறுபேறுகளினூடாக, எமது மூலோபாய தூரநோக்கு மற்றும் நிறைவேற்றும் சிறப்பு போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் வருமதிகள் அதிசிறப்பு வாய்ந்தனவாக அமைந்திருந்த நிலையில், நாம் தொடர்ந்தும் நிலைபேறான வளர்ச்சி மற்றும் எமது பரந்த வியாபார பிரிவுகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி இயங்குகிறோம். எமது கூட்டாண்மை நிதியியல் ஆலோசனை மற்றும் பிணைகள் கையாளல், வெல்த் மனேஜ்மன்ட் (wealth Management) மற்றும் பங்கு முகவர் பிரிவுகள் போன்ற அனைத்தும் மீட்சி மற்றும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதனூடாக, எமக்கு வருமான வழிமுறைகளை ஏற்படுத்தும் ஆற்றல் மற்றும் தொடர்ச்சியான வருமானத்தை ஈட்டும் திறன் போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கடுமையான இடர் முகாமைத்துவ மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், அதனூடாக எமது பங்காளர்களுக்கு நீண்ட கால பெறுமதியை ஏற்படுத்தி மேம்பட்டு வரும் நிதிசார் சூழல்கட்டமைப்பில் தொடர்ச்சியான வெற்றியை எய்துவதை உறுதி செய்கின்றோம்.” என்றார்.
2024 ஆம் ஆண்டில் First Capital பல கௌரவிப்புகளை பெற்று, நிதிச் சேவைகளை வழங்கும் துறையில் முன்னோடி எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது. SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் 2024 இல், ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் எனும் உயர்ந்த கௌரவிப்பை First Capital Holdings பெற்றுக் கொண்டதுடன், ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக நாமம் மற்றும் மேலும் இரு விருதுகளையும் பெற்றுக் கொண்டது. மேலும், First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC ஆகியன 2023/24 Business Today TOP 40 இல் முறையே 20 மற்றும் 21 ஆம் ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தன. அதனூடாக, 2024/25 நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் நிறுவனத்தின் சிறந்த வினைத்திறன் மற்றும் இலங்கையின் நிதிசார் கட்டமைப்பில் ஏற்படுத்தும் உயர் தாக்கம் போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், CA ஸ்ரீ லங்கா ஏற்பாடு செய்திருந்த TAGS Awards 2024 இல் First Capital Holdings, First Capital Treasuries, மற்றும் First Capital Money Market Fund (unit trust) ஆகியன மொத்தமாக ஐந்து விருதுகளை சுவீகரித்திருந்தன. அதில் இரண்டு தங்க விருதுகளும் அடங்கியிருந்தன. Integrated Reporting Awards 2024 இல் CMA Excellence விருதையும் நிறுவனம் பெற்றுக் கொண்டதனூடாக, தொழிற்துறையில் தனது தலைமைத்துவத்தை மேலும் உறுதி செய்திருந்தது. British Computer Society (BCS) இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த National ICT Awards 2024 (NBQSA) நிகழ்வில் இலங்கையின் முதலாவது நம்பிக்கை அலகுகளை WhatsApp ஊடாக பரிவர்த்தனையில் ஈடுபட அனுமதிக்கும் கட்டமைப்பான First Capital Invest WhatsApp Channel க்கு In-House Development பிரிவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக, இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது. அதனூடாக, நேர்த்தியான பணியிட கலாசாரத்தை ஊக்குவிப்பது மற்றும் GPTW சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கான அர்ப்பணிப்பு போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன.