Mar 17, 2025 - 01:10 PM -
0
18 ஆவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் திகதி ஆரம்பமாகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் கார்பின் போஷ்-யை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், தனது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, கார்பின் போஷ்க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐபிஎல் நடைபெறும் அதே நேரத்தில் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளும் நடைபெறுகிறது.
ஐபிஎல்லில் விளையாடுவதற்காக கார்பின் போஷ் தனது பிஎஸ்எல் ஒப்பந்தத்தை ரத்து செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.