Mar 17, 2025 - 01:50 PM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2025 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகிறது. இம்முறை இடம்பெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் பயிற்சியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மே மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளின் தலைவர்களும் பெறும் சம்பளம் (இந்திய ரூபா) எவ்வளவு என்பதை கீழே காணலாம்.
ரிஷப் பண்ட் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) ரூ. 27 கோடி
ஸ்ரேயஸ் ஐயர் (பஞ்சாப் கிங்ஸ்) ரூ. 26.75 கோடி
பேட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) ரூ. 18 கோடி
ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரூ. 18 கோடி
சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ரோயல்ஸ்) ரூ. 18 கோடி
அக்சர் பட்டேல் (டெல்லி கேபிட்டல்ஸ்) ரூ. 16.5 கோடி
சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) ரூ. 16.5 கோடி
ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) ரூ. 16.35 கோடி
ரஜத் பட்டிதர் (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு) ரூ. 11 கோடி
அஜிங்கியா ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரூ. 1.5 கோடி