செய்திகள்
காட்டுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

Mar 17, 2025 - 02:12 PM -

0

காட்டுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபர் தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த நபர் கடந்த 15 ஆம் திகதி இரவு சலகம தோட்டத்தின் ஹுலங்கல பகுதியில் நான்கு இளைஞர்களுடன் தங்கி இருந்துள்ளார். 

பின்னர், இந்தக் குழு நேற்று (16) காலை 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது. 

இதன்போது, மேற்படி இளைஞன் திடீரென ஓடத் தொடங்கியதோடு பின்னர் தாழ்வான காட்டுப் பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. 

இறந்த இளைஞனின் உடலின் பாகங்கள் காட்டுப் பகுதியில் சிதறிக் கிடந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மஹாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05