வடக்கு
கிளிநொச்சி கிராமசேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

Mar 17, 2025 - 02:58 PM -

0

கிளிநொச்சி கிராமசேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கிராமசேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம உத்தியோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவருக்கு கடந்த கடந்த 08 ஆம் திகதியான உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இப்போராட்டம் இடம்பெற்றது.

 

அத்துடன், கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை கோரியும் சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05