Mar 17, 2025 - 03:21 PM -
0
தொலைபேசி வழிகளில் இணைக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், மொபைல் தொலைபேசி என்பது வெறுமனே தொடர்பு கொள்வதற்கு மாத்திரம் உபயோகிக்கப்படுவதுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக, ஏராளமான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள அது வழிவகுக்கின்றது. நவீன சிந்தனையாளர்களுடன் அறிமுகங்களை ஏற்படுத்தி, அவர்களுடன் தொடர்புகளைப் பேணி, தொழில்களை மேம்படுத்தி, வாழ்க்கைத் திறன்களைக் கற்றறிந்து, அல்லது சமூகத்தில் செல்வாக்குச் செலுத்துபவராக முன்னேற்றம் காண்பதற்கு தம்மை வலுவூட்டிக்கொள்வதற்கு இலங்கை மக்கள் அனைவரும் ஹட்ச் “Level-UP” திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டியது சிறந்ததாகும்.
LinkedIn, X, YouTube, TikTok, Instagram, Telegram, மற்றும் WhatsApp உள்ளிட்ட 11 அத்தியாவசிய app களுக்கான கட்டுப்பாடற்ற வசதியை ஹட்ச் “Level-UP” திட்டங்கள் வழங்குகின்றன. வெறுமனே சமூக ஊடகங்கள் என்பதற்கு அப்பாற்பட்டவையாக இத்தளங்கள் காணப்படுகின்றன. கற்றறிதல், அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ளல் மற்றும் தொழில்ரீதியான வளர்ச்சிக்கு உதவும் கருவிகளாக இவை காணப்படுகின்றன. இணையவழி கற்கைநெறிகளை முன்னெடுப்பது, டிஜிட்டல் பரப்பில் வலுவான இருப்பினைக் கட்டியெழுப்புவது, வணிக வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது, அல்லது உலகின் நவீன போக்குகளைப் பின்பற்றுவது என பயனாளிகள் அனைவரும் தமது தொழில்கள் மற்றும் அபிலாஷைகளை மேம்படுத்துவதற்கு Level- Up திட்டங்கள் அவர்களுக்கு வலுவூட்டுகின்றன.
தொழில் புரிபவர்கள், மாணவர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் போன்ற தரப்பினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் முக்கியமான செயலிகளுக்கான இடைவிடாத வசதி, கட்டுப்பாடற்ற அழைப்புக்கள் மற்றும் கவர்ச்சிகரமான தரவு (டேட்டா) ஒதுக்கீடுகள் போன்றவற்றுக்கான உத்தரவாதத்துடன், இலங்கை மக்களின் தொடர்பாடல் வழிமுறைகளுக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ளன.
தமது அன்பிற்குரியவர்கள் மற்றும் சமூகங்களுடனான தொடர்புகளை தொடர்ந்தும் சிறப்பாகப் பேணுவதை உறுதி செய்யும் வகையில், Facebook, Messenger, Viber மற்றும் IMO ஆகியனவும் மேற்குறிப்பிட்ட 11 செயலிகளில் அடங்கியுள்ளன.
பல்வகைப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு தெரிவுகளின் கீழ் Level-Up திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன. ரூபா 998 திட்டமானது மேற்குறிப்பிட்ட 11 செயலிகளுக்கு கட்டுப்பாடற்ற வசதியை வழங்கும் 30 நாள் திட்டமாகக் காணப்படுவதுடன், எவ்விதமான நாளாந்த வரம்புகளுமின்றி ஏனைய பயன்பாடுகளுக்கான 30GB கூடுதல் தரவையும் (டேட்டா), எந்த வலையமைப்பிற்கும் கட்டுப்பாடற்ற அழைப்புக்களையும் வழங்குகின்றது. ரூபா 699 திட்டமானது 11 செயலிகளுக்குப் புறம்பாக, 3GB anytime டேட்டாவையும், ரூபா 499 திட்டமானது 5 பிரபல சமூகத் தளங்களுக்கான அணுகலையும் வழங்குகின்றன. “இலங்கை மக்கள் அனைவரும் தமது வாழ்வில் முன்னோக்கி அடியெடுத்து வைப்பதற்கு இடமளிப்பதே எமது நோக்கத்தின் மையமாக உள்ளது. வாழ்வில் மாற்றங்களுக்கு வழிவகுக்கின்ற அத்தியாவசிய டிஜிட்டல் தளங்களுக்கு கட்டுப்பாடற்ற வசதியை வழங்குவது, மக்களின் வாழ்வுகளை வளம் பெறச் செய்வது மாத்திரமன்றி, டிஜிட்டல் மேம்பாடு, அனைவருக்கும் வாய்ப்பளித்தல், உற்பத்தித்திறன், மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தை விரைவுபடுத்தல் ஆகிய எமது தேசிய இலக்குகளை விரைவுபடுத்தவும் உதவும். மிகவும் சிக்கனமான கட்டணத் தெரிவுகளுடன் இத்திட்டங்கள் வழங்கப்படுவதால், இவ்வாய்ப்பானது அனைவரது வாழ்விலும் மாற்றத்திற்கு வழிவகுப்பதுடன், தற்போது முழுத்தேசமும் அவர்களின் கைகளில் அடங்கும் அளவிற்கு தொடர்பாடல்களைப் பேணவும் வித்திட்டுள்ளது,” என்று ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் குறிப்பிட்டார்.
www.hutch.lk என்ற ஹட்ச் இணையத்தளத்தினூடாக இணைய வழியில் ஹட்ச் “Level Up” இணைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இது e-SIM மற்றும் வழக்கமான SIM ஆகிய இரு தெரிவுகளுக்கும் கிடைக்கின்றது. தற்போது ஹட்ச் முற்கொடுப்பனவுத் திட்ட வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள், தாம் விரும்பும் திட்டத்தின் தொகையை றீசார்ஜ் செய்வதன் மூலமாக அல்லது HUTCH APP மூலமாக அதனை தெரிவு செய்வதன் மூலமாக மிக இலகுவாக இதில் இணைந்து கொள்ள முடியும். பிற்கொடுப்பனவுத்திட்ட வாடிக்கையாளர்கள் HUTCH APP மூலமாக மீண்டும் மீண்டும் அல்லது ஒரே தடவையில் சேர்ந்து கொள்ளும் தெரிவின் மூலமாகவோ அல்லது 1788 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தமது அடிப்படைத் திடடத்திற்கு பதிலாக தாம் விரும்புகின்ற இத்திட்டத்திற்கு மாறுவதன் மூலமாகவோ இதில் இணைந்து கொள்ள முடியும்.