வடக்கு
கட்டுப்பணத்தை செலுத்திய சிறீலங்கா பொதுஜன பெரமுன

Mar 17, 2025 - 04:35 PM -

0

கட்டுப்பணத்தை செலுத்திய சிறீலங்கா பொதுஜன பெரமுன

மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன யாழில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

 

பெரமுனவின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீத்நாத் யாழ். தேர்தல் திணைக்களத்தில் இன்று (17) காலை இக் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

 

யாழ். மாநகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபை ஆகிய இரண்டு சபைகளில் மட்டுமே இம்முறை போட்டியிட உள்ளதாக அமைப்பாளர் கீத்நாத் தெரிவித்துள்ளார்.

 

இந்த முறை நடைபெறுபம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடந்து முறை போன்று அமைதியாகவும் வன்முறை இல்லலாமல் நடப்பதற்கு கட்சி சார்பில் எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்குவோம் எனவும் மேலும் தெரிவித்தார்.

 

இதேவேளை பொதுஐன பெரமுன கட்சியானது நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்களில் இத்தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05