சினிமா
திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்!

Mar 17, 2025 - 07:52 PM -

0

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்!

குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என பல வருடங்களுக்கு முன்பு தமிழ் ரசிகர்களுக்கு புதியதாக அறிமுகம் ஆன நிகழ்ச்சி.

 

அதிலும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஒரு ப்ளஸ். தொடர்ந்து 7 சீசன்கள் வரை நிகழ்ச்சியை சூப்பராக நடத்துவதோடு பொது விஷயங்களையும் பேசி மக்களை ஈர்த்து வந்தார்.

 

ஆனால் கடைசியாக ஒளிபரப்பாகி முடிந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார், அவர் அவரது ஸ்டைலில் நிகழ்ச்சியை கொண்டு சென்றார்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் 8வது சீசன் இந்த வருடம் ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8வது சீசன் வேறொரு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்தது.

 

மீண்டும் ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் 8வது சீசனிற்கு டிஆர்பி குறைவாக வருகிறதாம். எனவே மீண்டும் ஒளிபரப்பான பிக்பாஸ் 8வது சீசனை ஒளிபரப்புவதை நிறுத்தியுள்ளனர். 

Comments
0

MOST READ
01
02
03
04
05